×

திருச்செந்தூரில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மை விற்பனை விறுவிறுப்பு: பல்வேறு வகையிலான பொம்மைகளை வாங்க மக்கள் ஆர்வம்

தூத்துக்குடி: நவராத்திரி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது. நவராத்திரி திருவிழா வரும் 15-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கொலு வைப்பது வழக்கம். இந்நிலையில், திருச்செந்தூரில் நவராத்திரி கொலுவிற்கு தேவையான அழகிய கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முருகன், பரமசிவன், பார்வதி உள்ளிட்ட தெய்வ பொம்மைகளும் திருமண வைபவம் உள்ளிட்டவற்றை சித்தரிக்கும் பொம்மைகளையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றன. பொதுமக்கள் ரசனைக்கு ஏற்ப புதுப்புது வகையிலான பொம்மைகள் விற்பனைக்கு வருவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றன. கொலு பொம்மைகள் ரூ.50-லிருந்து ரூ.5,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

The post திருச்செந்தூரில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மை விற்பனை விறுவிறுப்பு: பல்வேறு வகையிலான பொம்மைகளை வாங்க மக்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Kolu ,Navratri ,Trichendur ,Thothukudi ,Navratri festival ,Tiruchentur ,Tiruchendur ,
× RELATED திருச்செந்தூர் கடலில் அதிகப்படியான...